உள்ளூர் செய்திகள்

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் நூல் வெளியீடு

துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் நூல் வெளியீடு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரவையின் தலைவர் ஏ. முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக மார்க்க அறிஞர் டாக்டர் சதீதுத்தீன் பாகவி பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் அவர் எழுதிய 'இஸ்லாத்தின் வேர்களும், விழுதுகளும் என்ற நூலின் இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டது. நூலை ஏகத்துவ மெய்ஞான சபையின் கலீபா முனைவர் எம்.ஜே. முஹம்மது இக்பால். தலைவர் கலீபா டாக்டர் சஹாபுதீன், செய்யது அலி மவுலானா, அதிரை சர்புதீன், ஹுசைன் மக்கி ஆலிம், காயிதேமில்லத் பேரவை ஏ. முஹம்மது தாஹா, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், பி.ஆர். எல். முஹம்மது சலீம், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் கீழக்கரை முஹம்மது ராஷிக் உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !