மஸ்கட்டில் தீபாவளி திருவிழா
மஸ்கட்டில் தீபாவளி திருவிழாமஸ்கட் :மஸ்கட்டில் இந்திய சமூக மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பஞ்சாப் மாநிலத்தவரின் சார்பில் தீபாவளி திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இந்த திருவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். அவர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதனை தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.- மஸ்கட்டில் இருந்து நமது செய்தியாளர் காஹில்