துபாயில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து எஃப்.ஓ.அய். ஈவெண்ட்ஸ் நிறுவனம் தீபாவளி உத்சவ் சிறப்பு நிகழ்ச்சியை எடிசலாட் அகாடமியில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டார். ரங்கோலி போட்டி, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா