குவைத் இந்திய தூதரக சேவை மையத்தில் இந்திய தூதர் திடீர் ஆய்வு
குவைத் : குவைத்தின் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் நடந்து வரும் தூதரக சேவை மையம் பஹாஹீல் பகுதியில் பி.எல்.எஸ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டார். மேலும் அந்த மையத்துக்கு வந்த இந்திய சமூகத்தினரின் தேவைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது இந்திய தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா