உள்ளூர் செய்திகள்

துபாயில் இந்திய சுதந்திர தின விழா

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதர் சதீஷ்குமார் சிவன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையின் முக்கிய பகுதியை வாசித்தார். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், சமூக ஆர்வலர் ரமாமலர் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்