மஸ்கட்டில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு
மஸ்கட்: மஸ்கட் இந் திய தூதரக வளாகத்தில் ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி சிறப்பான முறையில் விளையாடி தேசத்துக்கு பெருமை தேடி வருகிறது. அந்த வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின்னர் ஒவ்வொரு வீரர்களுக்கும் இந்திய தூதர் கைகுலுக்கி வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், ஓமன் விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா