கத்தாரில் இந்திய லிச்சி பழ விற்பனை
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள ஹைப்பர் மார்க்கெட்டில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லிச்சி பழ விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையை இந்திய தூதர் விபுல் தொடங்கி வைத்தார். இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா