தோஹாவில் இந்திய மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கூட்டத்துக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். அவரிடம் 40 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாஸ்போர்ட் பெறுவதில் தாமதம், நிறுவனங்களில் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். இந்த பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அப்போது இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா