ஷார்ஜாவில் சர்வதேச யோகா தினம்
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் 11வது சர்வதேச யோகா தினம் வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் தலைமை வகித்தார். அவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா