ஜெத்தா கேரளா பௌராவலியின் லோகோ வெளியீட்டு விழா
ஜெத்தா: ஜெத்தா கேரள பௌராவலியின் புதிய சின்னம் ஒரு கோலாகலமான நிகழ்வில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது. ஜெத்தாவில் உள்ள மலையாளி சமூகத்தின் பொதுஅமைப்பான ஜெத்தா கேரள பௌராவலியின் புதிய லோகோ, வண்ணமயமான மேடையில், இந்திய தொழிலதிபர் வி.பி. முஹம்மது அலி வெளியிட்டார். கேரளத்தின் பதினான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கேற்றது, வெளியீட்டு விழாவுக்கு மகத்துவம் சேர்த்தது. லோகோவின் வடிவமைப்பு, நிறங்கள், சவுதி அரேபியாவையும் நமது சொந்த நாட்டையும் பிரதலிப்பதாக இருந்தது. இதன் மாதிரிப் பிணைப்புகளையும் அதன் மூலம் உருவாகும் சக்திவாய்ந்த ஒத்துழைப்பையும் நட்புறவையும் இந்த லோகோ பிரதிபலிக்கிறது என்று பௌராவலி செயலாளர் ஜலீல் கண்ணமங்களம் விழாவில் விளக்கினார். ஜெத்தாவில் உள்ள மலையாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெத்தா கேரள பௌராவலி, கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளை சேர்த்துக்கொண்டு மேற்கொள்ளும் செயல்பாடுகள் மற்ற அமைப்புகளுக்கு ஒரு சிறந்த மாதிரியாக உள்ளன என்று லோகோவை வெளியிட்ட வி.பி. முஹம்மது அலி தெரிவித்தார். கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் ஓ.பி. நாசர், ஜெத்தா கேரள பௌராவலிக்காக அழகாகவும் அர்த்தமுள்ளதுமான ஒரு லோகோவை வடிவமைத்துள்ளார். விழாவில், ஜெத்தா கேரள பௌராவலி ஏற்பாடு செய்த 'ஸ்பாண்டேனியஸ் 2025' பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. தலைவர் கபீர் கொண்டோட்டியின் தலைமையில் நிகழ்வு நடக்க பொதுச் செயலாளர் மன்சூர் வயனாடு உறுப்பினர்களை வரவேற்றார். பின்னர் கணக்காளரான சரீப் அறக்கல் நிதி அறிக்கை வழங்கினார். ஜித்தா கேரள பௌராவலியின் வெவ்வேறு பிரிவுகளின் கன்வீனர்கள் அலி தெக்குதோடு (வெல்பெயர்), சலாஹ் காராடன் (பப்ளிக் ரிலேஷன்ஸ்), ஷமீர் நத்வி (பப்ளிக் வாட்ஸ் குழு), வேணு அந்திக்காடு (நிகழ்ச்சிகள்), நசீர் வாவாகுஞ்சு (மீடியா மற்றும் பப்ளிசிட்டி), சி.ஏச். பஷீர் (அபீரின் கம்யூனிட்டி பிரீமியம் பிளஸ் கார்டு), மிர்சா சரீப், உண்ணி தெக்கேடத்த (சோஷியல் அவேர்நஸ்), நாசர் சாவகட் (பயிற்சி) ஆகியோர் தங்களது செயல்பாட்டு அறிக்கைகளை வழங்கினர். பௌராவலி முன்னிலை வகிக்கும் மது மற்றும் நர்கோடிக் பொருட்கள் எதிரான பிரச்சாரத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரிவானதும் பயனுள்ளதும் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, செயல்பாடு தீவிரமாக்குவதற்கான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. கானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'கல்வி மற்றும் சமூகம்' என்ற தலைப்பில் டாக்டரேட் பெற்ற ஜித்தா நவோதயா தலைவரும் மற்றும் ஆசிரியரான ஷிபு திருவனந்தபுரத்திற்கு விழாவில் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 'ஸ்பாண்டேனியஸ் 2025' பயிற்றுனர்களான எம்.எம். இர்ஷாத், ரஷீத் அமீர், சஜித் ஏ.எம்., கபீர் கொண்டோட்டி ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஜித்தா கேரள பௌராவலியின் உறுப்பினர்களான பாடகர்கள் மிர்சா சரீப், சலீம் நிலம்பூர், மும்தாஸ் அப்துல் ரஹீமான், முஹம்மது ராபி, சிமி அப்துல் காதர், காசிம் குட்யாடி, சத்தியன், சுவிஜ் சத்தியன், ரமீஸ் ராபி, அபிரா சபீன் ராபி, மன்சூர் வயனாடு, ஹசன் கொண்டோட்டி, ரஹீம் காக்கூர், ஹாரிஸ் ஹசைனர், ஹாபிஸ் குட்யாடி, முஹம்மது அலி, டாக்டர் முஹம்மது பைசல் ஆகியோர் இசை விருந்தை ஏற்பாடு செய்தனர். குழந்தைகளின் கண்கவர் நடனமும் அரங்கேற்றப்பட்டது. சோபியா பஷீர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏழு மணி நேரத்திற்கு மேலாக நடந்த நிகழ்ச்சியில், பெஹல்காம் தியாகிகளுக்கு அஞ்சலிகள் செலுத்தப்பட்டு, தங்கள் குடும்பங்களின் மற்றும் நாட்டின் துக்கத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பங்குகொண்டனர். காதர் ஆலுவா, நவாஸ் தங்கள், ஹிஃப்ஸுரஹ்மான், ராபி ஆலுவா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர் . - நமது செய்தியாளர் M Siraj