ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் தொடக்க நிகழ்வு
ஜெத்தா மாநகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலப் பணியாற்றி வரும் மூத்த ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்டு ஜெத்தா தமிழ் கலாச்சார மையம் என்ற பெயரில் செயல்பட துவங்கியுள்ளது. மேலும் நிர்வாக குழு,செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பும், இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியும் ஜெத்தாவில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக, அமைப்பின் ஒருங்கிணைபாளராகிய ஜமீல்தீன் இறை வசனங்களை ஓதி துவக்க உரையாற்றினார்.அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஷெரீப் தலைமை தாங்கி அமைப்பின் முக்கியத்துவத்தை பற்றியும் தலைமை உரையாற்றினார். அமைப்பின் செயலாளர் அப்துல் சமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அமைப்பின் பொருளாளர் அல் அமீன் அமைப்பின் கொள்கை விளக்கங்கள் பற்றி உரையாற்றினார். அமைப்பின் கௌரவ ஆலோசகர் ரஃபிக் உசேன் வருங்காலத்தில் அமைப்பின் முன்னேற்ற கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது அப்பாஸ், ஹுசைன், ஜாஹிர் உசேன் வாழ்த்துரை வழங்கினர். துணைத் தலைவர் சீனி இப்ராஹிம் நன்றி கூறினார்.- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்