மஸ்கட் இந்திய தூதரகத்தில் இரு நாட்டு வர்த்தகர் சந்திப்பு
மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இரு நாட்டு வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சமையல் பொருட்கள், பொறியியல் மற்றும் கட்டுமானத்துறையை சேர்ந்த இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் இரு நாட்டு வர்த்தகம் மேலும் அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா