அரபி மொழியில் இராமாயணம் மற்றும் மஹாபாரதம்
குவைத் இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகாவிடம் அரபி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந்திய இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய நூல்களை அதன் மொழிபெயர்ப்பு ஆசிரியர் அப்துல்லா அப்துல் லத்தீஃப் அல் நிசப் வழங்கினார். அவருடன் இணைந்து அப்துல்லா அல் பரூண் இந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர்கள் 30 க்கும் மேற்பட்ட இந்திய இதிகாசங்களை மொழிபெயர்ப்பு செய்து அரபுலகத்துக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் காஹிலா