ஷார்ஜாவில் வண்ணம் தீட்டும் பயிற்சியில் பள்ளி மாணவர்கள்
ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் ஷார்ஜா குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் மாணவ, மாணவியருக்கு பயனளிக்கும் பல்வேறு கருத்தரங்குகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணம் தீட்டும் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையான வழிகாட்டுதலை வழங்கினர். - நமது செய்தியாளர் காஹிலா