உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் தமிழக மாணவருக்கு ஷேக் சுல்தான் விருது

ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள பள்ளிக்கூடத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹாரித் முஹம்மது படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ஷார்ஜாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஷேக் சுல்தான் விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி விருது வழங்கி கௌரவித்தார். மேலும் பல மாணவர்களும் இந்த விருதினை பெற்றனர். விருது பெற்ற தமிழக மாணவருக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாணவரின் தந்தை முஹம்மது அபுபக்கர் அமீரக தொலை தொடர்பு நிறுவனத்திலும், தாயார் ஜாஸ்மின் இல்லத்தரசியாகவும் இருந்து வருகிறார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்