உள்ளூர் செய்திகள்

லெபனானில் தூதரக சேவை சிறப்பு முகாம்

அம்மான்: லெபனான் நாட்டில் ரவி தாஸ் குருத்வாரா அமைந்துள்ளது. இந்த குருத்வாராவில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமை வகித்தார். முகாமில் தூதரக சேவை தொடர்பாகவும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெரிவித்தவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள் முகாமில் பங்கேற்று ஆலோசனைகளை தெரிவித்தனர். குருத்வாரா நிர்வாகிகள் முகாம் சிறப்புடன் நடக்க தேவையான பணிகளை மேற்கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !