ஷார்ஜாவில் அமீரக தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜா அஸ்பம் இந்தியன் இண்டர்னேசனல் பள்ளிக்கூடத்தில் அமீரகத்தின் 54வது தேசிய தினத்தையொட்டி பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடையே சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்குக்கு முதல்வர் ஷீலா ஜார்ஜ் தலைமை வகித்தார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக வொண்டர்புல் நிறுவனத்தின் தலைவர் திருச்சி அன்வர் அலி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். விழாவில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், அல்ஹாப் மாலிக், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். - ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் ஆசாத்