உள்ளூர் செய்திகள்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மாணவர்களின் சிறுகதை தொகுப்பு வெளியீடு

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மாணவர்களின் சிறுகதை தொகுப்பு வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடந்த 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தன.இதில் முக்கியமாக வி மெண்டர் என்ற நிறுவனம் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவியரின் சிறுகதைகளை தொகுத்து ஆங்கில மொழி நூலாக 'ஸ்டோரி கார்ட்' என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி 5வது ஆண்டாக வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை தீபாதீபு, லதா கிருஷ்ணன், ஜெயஸ்ரீ சங்கர், ஆயிஷா ஷேக், கிருஷ்ணகுமார், ஷாபிரா ஷேக் உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.விழாவில் வித்யூத் பாலாஜி, வன்யா அகர்வால், ரோஹன் சேவியர், நகஸ் சூரி, ஆத்யா காமேஷ், இஸ்திதா கின்ஸ்வாரா, விராஜ் சவுத்ரி, நந்தனா மனோஜ், அனகிதா யாடெக்ரி, ஹன்சிகா சென்னுரி, கார்த்திக் கிருஷ்ணா, அய்தின் ஆசிப், மீரா ராகுல் உள்ளிட்ட இளம் எழுத்தாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இந்த விழா தங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்களது சிறுகதைகளை தொகுப்பு நூலாக வெளியிட உதவி வரும் ஷார்ஜா புத்தக ஆணையத்துக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.- நமது தினமலர் வாசகர் லதா கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்