துபாய் ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர்
துபாய்: துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் மைதான் பகுதியில் 10 கிலோ மீட்டர் தூர அல் சாகெல் ஓட்டப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி (வயது 55) 10 கிலோ மீட்டர் தூர ஓட்டப்போட்டியில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் 3 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் தூரம் ஆகிய பிரிவுகளிலும் போட்டி நடந்தது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா