உள்ளூர் செய்திகள்

அசீர் NRT உதவியால் நாடு திரும்பிய தமிழர்

விமான டிக்கெட் மற்றும் பயண ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் இந்தியா திரும்ப முடியாமல் சவூதி அரேபியாவில் சிக்கியிருந்த முருகன் ராஜகண்ணுக்கு, அசீர் NRT குழு (டாக்டர் நூஹு அப்துல்லாஹ் கான், இஸ்மாயில் ஹுசைன்,டாக்டர் ஆனந்த் தேவா, மற்றும் ஹசன் பாரூக்) மனிதாபிமான முறையில் உதவினர். தனியாக பயண ஏற்பாடுகளை செய்ய முடியாத நிலையில் இருந்த அவரை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்கான, உடனடியாக விமான டிக்கெட், பயண ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் அசீர் NRT அமைப்பு செய்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. அசீர் NRT பிரதிநிதிகள் தெரிவித்ததாவது: “கடினமான தருணங்களில் ஒருவருக்கொருவர் உதவுதல் எங்கள் பணியின் அடிப்படை நோக்கம். முருகன் ராஜகண்ணுவிற்கு உதவியதில் பெருமை கொள்கிறோம்; இதுபோன்ற மனிதாபிமான முயற்சிகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து மேற்கொள்வோம்.” முருகன் ராஜகண்ணு தன்னுடைய நன்றியை தெரிவித்து, அசீர் NRT குழுவின் கருணைமிக்க சேவையை மனமார பாராட்டினார். - ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !