அபுதாபியில் தராவீஹ் தொழுகை
அபுதாபி: அபுதாபி இந்தியன் இஸ்லாமியக் சென்டரில் ரமலான் மாதத்தையொட்டி இஷா தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகை 20 ரக்அத்துகள் நடைபெற்று வருகிறது. இரவு 8:15 மணிக்கு இஷா தொழுகையும், இரவு 8:30 மணிக்கு தராவீஹ் தொழுகையும் நடைபெறுகிறது. அனைவரும் பங்கேற்று ரமலானின் நன்மைகளை பெற்றிட அபுதாபி லைலத்துல் கத்ரு கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. - நமது செய்தியாளர் காஹிலா