உள்ளூர் செய்திகள்

துபாயில் அமெரிக்க தமிழ் பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் அமெரிக்க தமிழ் பிரமுகரும், ஆய்வாளரும், முன்னாள் மாணவர் சங்க வட அமெரிக்க கிளை தலைவருமான டாக்டர் அப்துல் ருக்னுதீனுக்கு வரவேற்பு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச் செயலாளர் மன்னர் மன்னர் தொடக்கவுரை நிகழ்த்தினார். வடக்கு அமெரிக்க சங்க தலைவர் டாக்டர் அப்துல் ருக்னுதீன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் தனது ஏற்புரையில் அமீரகத்தில் முன்னாள் மாணவர் சங்கம் வழங்கிய வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாம் டைரி மாத இதழின் ஆசிரியர் காஜா மைதீன், அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைத்தலைவர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் ஜாபர் சித்திக், ஃபார்ம் பாஸ்கெட்டின் உரிமையாளர் வலசை பைசல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஃபஸ்ருதீன் நன்றி கூறினார். நவாசுதீன், ரஹ்மத்துல்லா உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்