உள்ளூர் செய்திகள்

மதீனாவில் தமிழருக்கு மேற்கு மண்டல அயலக அணியின் உதவி

மதீனாவில் கடந்த ஓராண்டு காலமாக உணவகத்தில் வேலை பார்த்த சுஜித் குமார் என்பவருக்கு ஆறு மாத சம்பள பாக்கி இருந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு பிரச்சனையில் சிக்கி தவிப்பதாக மேற்கு மண்டல அயலக அணியை தொடர்பு கொண்டார். மேற்கு மண்டல அயலக அணி அமைப்பாளர் எழில் மாறன் யோசனைப்படி, அயலக அணி துணை அமைப்பாளர் அபு இன்பன், மதீனா கிளை குஜாமுதீன், ஜமால் ஜாகிர், அப்துல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் சுஜித் குமார் வேலை செய்யும் உணவக மேலாளரை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவருக்கு சம்பள பாக்கி மற்றும் விமான டிக்கெட் எடுத்து கொடுத்து மதீனா விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் மேற்கு மண்டல அயலக அணி அமைப்பாளர் எழில் மாறன் மற்றும் துணை அமைப்பாளர் அபு இன்பன் குழுவினருக்கு சுஜித் குமார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !