மதீனாவில் ஹாஜிகளுக்கு மேற்கு மண்டல அயலக அணி வரவேற்பு
மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருகை தந்த தமிழ்நாடு ஹாஜிகளை ஜித்தா மேற்கு மண்டல அயலக அணியின் துணை அமைப்பாளர் அபு இன்பன் தலைமையில், மதீனா கிளையின் சார்பாக கழக தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆதிலா குஜாமுதீன் பேருந்தில் ஹாஜிகளுக்கு மதினாவில் செய்ய வேண்டிய அமல்கள் குறித்து விவரித்து வரவேற்புரை ஆற்றினார். அல்-மதீனா மெட்ராஸ் டேட்ஸ் உரிமையாளர் குஜாமுதீன், தனது நிறுவனம் சார்பில் அனைத்து ஹாஜிகளுக்கு கிப்ட் பேக் வழங்கி கௌரவித்தார். அப்துல் ஹமீது, அப்துல் காசிம், ஜமால் ஜாகீர்,சாதிக்,தாதா பீர், சென்னை கார்கோ முகமது ராவுத்தர் அப்பா, ரஹ்மத் அலி, விருத்தாச்சலம் இம்தியாஸ்,காயல் தாவூத் ஆகியோர் ஹாஜிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். ஜித்தா மேற்கு மண்டல பொறுப்பாளர் எழில் மாறன் ஆரம்பம் தொட்டு ஆலோசனைகள் வழங்கி தேவையான வழிமுறைகளை வகுத்து கொடுத்தார். - நமது செய்தியாளர் M Siraj