ஓமஹாவில் களைகட்டிய வேட்டையன் திருவிழா
ஓமஹா (நெபிராஸ்கா) நகரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிகழ்வு நடந்தது. ரஜினிகாந்தின் படமான 'வேட்டையன்' திரையரங்கில் முதல் காட்சி திருவிழாவாக ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு களைகட்டியது. RAAGA மியூசிக்கல் என்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நகரில் உள்ள தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக நிஷா டான்ஸ் ஸ்கூல் (NDS, Omaha) RAAGA-வுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரின் பாராட்டைப் பெற்றது. தமிழ் கலாசாரத்தை ஊக்குவித்து, ஓமஹா நகரத்தில் இசை மற்றும் விளையாட்டை இணைத்து RAAGA ஏற்பாடு செய்த இந்த விழா மிகுந்த வெற்றியடைந்தது. NDS குழுவின் திறமையான நடன நிகழ்ச்சிகள் விழாவின் மாபெரும் வெற்றிக்கு துணைநின்றன. - நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்