பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் பாகவத சப்தாஹம்
அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் ஜூலை 15 முதல் பாகவத சப்தாஹம் (ஏழு நாள் உபந்யாஸம்) விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலை அமெரிக்க கண்டத்தின் திருப்பதியாக, மக்கள் கருதுகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப கோவில் நிர்வாகிகளும் அவ்வப்போது உள்ளூர் மக்களின் ஆன்மீக தேடுதலுக்கு உபன்யாசங்களை ஏற்பாடு செய்வது வழக்கம். இந்த வரிசையில் ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை உ வே துஷ்யந்த் ஶ்ரீதரின் பாகவத உபந்யாஸம் நடைபெறுகிறது. முதல் நாள் உபந்யாஸம் திட்டமிட்டபடி பாகவத மஹாத்மியம், பரீக்ஷித் ஜனனம் மற்றும் வராக அவதார மகிமையுடன் இனிமையாக நடந்தேறியது. இந்த உத்சவத்தில் சுமார் 300 ஆஸ்திகர்கள் கலந்து கொண்டு நம் புராண வைபவங்களை அனுபவித்தனர். மற்ற நாட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆஸ்திகர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஶ்ரீ வேங்கடேஸ்வரின் அருளை பெற வேண்டுகிறோம். - நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்