உள்ளூர் செய்திகள்

கனடா சிவ சத்தியநாராயண சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

கனடாவில் அன்டாரியோ மாநிலத்தில் 2009ல் சிவ சத்தியநாராயண சுவாமி திருக்கோவில் சந்திரசேகர சிவாச்சாரியாரியாரால் ஸ்தாபித்து நிலைநிறுத்தப்பட்டது. அதன் புனிதநீராட்டு (புனர் ஆவர்த்தன கும்பாபிஷேகம்) 2024, ஜூலை ஏழாம் நாளில் நடந்தேறியது. அதைப் பெங்களூரு சைவ ஆகமக் கல்லூரி இயக்குனர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், ஆலய நிறுவனர் சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமைதாங்கி சிறப்பாக நடத்தினர். இதற்கு உதவியாக அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சைவ, வைணவ ஆச்சாரியர், வேதபண்டிதர் கலந்துகொண்டு வேத, ஆகம, சைவ, வைணவத் திருமுறைகளை ஓதி, பூஜை வழிபாடுகளை நடத்திச் சிறப்பித்தனர். உலக நலன், அமைதி கருதி இவ்வழிபாடுகள் செவ்வனே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. மாலை சிவ-பார்வதி, ஸ்ரீநிவாச திருக்கலயாண வைபத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இந்தத் திருநாள்களில் 1500க்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்துகொண்டனர் - நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்