உள்ளூர் செய்திகள்

வடக்கு ஜெர்சி முத்தமிழ்ச் சங்கத் தமிழ் விழுதுகளுக்கு விருதுகள் வழங்கு விழா

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் முத்தமிழ்ப் பள்ளி தொடக்க விழா அறிவிப்பு மற்றும் தமிழ் விழுதுகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவினை NJMTS நிர்வாகிகள் பார்சிப்பனி நூலக அரங்கில் மே-18ல் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரும் கல்வியாண்டு(2024 - 25) முதல் முத்தமிழ்ப் பள்ளி, பார்சிப்பனி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்காக லாபநோக்கற்ற பள்ளியாக செயல்படவுள்ளது. தன்னார்வ உள்ளங்களால் தமிழை குழந்தைகளுக்கு கற்பிக்க உதயமாகிறது வடக்கு ஜெர்சி முத்தமிழ்ச் சங்கத்தின் (NJMTS), முத்தமிழ்ப் பள்ளி https://go.njmts.org/mt24 மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும், வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை நடத்தியப் போட்டிகளில் சிறப்பித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இது தவிர குழந்தைகளை மகிழ்விக்க மேஜிக் ஷோவும், பெரியோர்களுக்கு பாட்டுக்கு பாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வினை வெற்றியடையச் செய்துள்ளனர். நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்