உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்பர்க் தமிழ் சங்கத்தின் இரத்த தான முகாம்

தானத்தில் மிக புனிதமானது இரத்த தானம். பிட்ஸ்பர்க் தமிழ் சங்கமும் இந்த உன்னத சேவையில் தன் பங்கை கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக செய்து வருகின்றது. இந்த ஆண்டு பிட்ஸ்பர்க் தமிழ் சங்கத்தின் இரத்த தான முகாம் 15/12/2024 அன்று வழக்கம் போல பெர்க்ஷையர் கிளப் ஹவுஸில் நடைப்பெற்றது. சமூக சேவைகளில் தமிழர்களுக்கு இணையாக யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் நெஞ்சங்கள் கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்தனர். - நமது செய்தியாளர் ஜெயஸ்ரீ சௌந்தரராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்