கவிஞர் விஜய கிருஷ்ணன் தம்பதியருக்கு இங்கிலாந்தில் பாராட்டு விழா
தமிழ் ஆர்வலர் Dr. கந்தசாமி செல்வன் குழுவும், முத்தமிழ் அகாடமி Dr. ரமேஷ் குழுவும் இணைந்து, தமிழ் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் நெறியாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றும் கவிஞர் விஜய கிருஷ்ணன் மற்றும் அவரின் துணைவியார் சாந்தி விஜயகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா லெஸ்டர் கிரேட் கிளன் சமுதாயக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இங்கிலாந்தின் பல நகரங்களில் இருந்த தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டனர். விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, குத்துவிளக்கேற்றல், நடனம், சான்றிதழ் மற்றும் நினைவு கேடயம் வழங்கல் என அனைத்தும் தொடர்நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. முன் திட்டமிட்ட முறையான ஏற்பாடு, விருந்தோம்பல் கரிசனம், அறுசுவையான உணவு வகைகள் — அனைத்தும் தமிழர் மரபின் உன்னத பண்பை வெளிப்படுத்தின. இவர்களின் சமூகப் பங்களிப்பு இங்கிலாந்து வாழ் தமிழர்களால் பெருமையுடன் போற்றப்பட்டது. இவர்களின் இனிய சிரிப்பு, நயமான உரையாடல், மென்மையான அணுகுமுறை — அரங்கில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. கிராய்டன் தமிழ் சங்கத்தின் தலைவர் மற்றும் மேயர் அப்பு தாமோதரன் சிறப்பு விருந்தினராக உரையாற்றினார். Dr. கந்தசாமி செல்வன் வரவேற்புரையும், நன்றியுரையும் ஆற்றினார். இந்த விழாவில் இங்கிலாந்து தமிழ் ஆர்வலர் குழுவும், முத்தமிழ் அகாடமியும் இணைந்து அவர்களைப் பாராட்டியதில் பெருமிதம் கொள்கின்றன. தகவல்: இங்கிலாந்திலிருந்து சங்கர், இலண்டன் திருவள்ளுவர் இலக்கிய பண்பாட்டு சங்கம், கணேசன் கிருஷ்ணமூர்த்தி - ரீடிங் தமிழ் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர் குழு உறுப்பினர் - அமெரிக்காவிலிருந்து நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்