நியூஹாம்ப்ஷயரில் ஸ்ரீமத்பகவத் கீதா ஸ்லோக பாராயணம்
நியூஹாம்ப்ஷயரில் டிசம்பர் 15-ந்தேதி சமஸ்கிருத பாரதி நாஷுவா, நியூஹாம்ப்ஷயர் கிளை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து பகவத் கீதா ஜெயந்தி தினத்தை ஸ்ரீமத்பகவத் கீதா ஸ்லோகங்களை பாராயணம் செய்து கொண்டாடினர். இந்த விழாவில் சமஸ்கிருத பாரதி மற்றும் நாஷுவா ஹிந்து மந்திரத்தின் பாரதீயவித்யாஷ்ரம மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக்க உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். மாஸச்சூசெட்ஸ் ஷ்ரூஸ்பெரி ஸ்ரீ ராதா க்ருஷ்ண மந்திரத்தின் பிரபுஜி, மாணவர்களுக்கு பகவத்கீதையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.