உள்ளூர் செய்திகள்

அன்புள்ள எதிரிக்கு

உன்னிடம் குறை கண்டால் என் குறையையே அது காட்டுமே உன்பால் சினம் கொண்டால் எனக்கு இரத்த அழுத்த தாக்கமே உன்னை நினைத்து பொறாமையுற்றால் என்னையே நான் வன்மத்தில் இழப்பேனே உனக்கு இடர் கொடுத்தாலோ என் மனசாட்சி எனைக் கொல்லுமே உன்னை நிந்திக்க நேரமுமில்லை என் மனதில் போட்டியும் இல்லைஎதிரி என்னும் முகவரியை நான் கொடுத்தால்தானே எதிரியாவாய்உன்னால் தீங்கு நேர்ந்தாலும் என்னைக் காக்கும் என் அன்புள்ளமேஉடல் வேறு ஆனாலும் உள்ளத்துள் உறையும் உண்மை ஒன்றேவாழ்கவே வளமுடன் நீயுமே இனிய உலகத்தை ரசித்து வாழ்வோமே- தினமலர் வாசகி மாதங்கி சேஷமணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்