sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கன்னி

/

கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
16 செப் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

கன்னி

கன்னி

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்
முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரித்தாலும் ராசிநாதன் புதன் செப். 28 வரை ராசிக்குள் சஞ்சரிப்பதால் புத ஆதித்ய யோகம் உண்டாகி உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாக போகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேற போகிறது. புதிய சொத்து, வசதி வாய்ப்புகள், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவுகள் நனவாகப் போகிறது. 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகு மாதம் முழுவதும் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வம்பு வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவார். பொன் பொருள் சேர்க்கைக்கு வழி அமைப்பார். உங்கள் திறமையை வெளிப்படுத்துவார். கணவன், மனைவிக்குள் இணக்கத்தை ஏற்படுத்துவார். அக்.8 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரை இருந்த நெருக்கடிகள் மறையும். இந்த மாதம் உங்களுக்கு யோகமானதாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 8.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 23, 28. அக். 1, 5, 10, 14.
பரிகாரம் திருவள்ளூர் வரதராஜ பெருமாளை வழிபட சங்கடம் விலகும்.

அஸ்தம்
மனதில் தெளிவும் செயலில் உறுதியும் கொண்டு வாழும் உங்களுக்கு எடுத்த வேலைகள் எல்லாம் இந்த மாதத்தில் வெற்றி பெறும்.  அக். 7 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, வேலை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும். உங்கள் திறமை வெளிப்படும். அக். 8 முதல் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும். தன்னம்பிக்கை கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்குவார். ராசிநாதன் புதன் செப். 28 வரை ஆத்ம காரகனுடன் இணைந்து உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். தொழிலை விருத்தி செய்வதற்காக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். பங்கு மார்க்கெட்டில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழல் மாறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் பெருமைப்படும் நிலை சிலருக்கு ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனுடைய சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். செல்வாக்கு வெளிப்படும்.
சந்திராஷ்டமம்: அக். 9.
அதிர்ஷ்ட நாள்: செப். 20, 23, 29. அக். 2, 5, 11, 14.
பரிகாரம் ராமநாத சுவாமியை வழிபட நன்மைகள் நடக்கும்.

சித்திரை 1, 2 ம் பாதம்
துணிச்சல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, மாதம் முழுவதும் செவ்வாய் 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், குடும்பம், பண விவகாரங்களில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஞானக்காரகன் குருவின் பார்வை அக். 7 வரை 2 ம் இடத்திற்கு கிடைப்பதால் நெருக்கடி, பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கடலில் மூழ்கியவர் கரையேறுவது போல் உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். நீண்ட நாள் கனவு நனவாகும். சேமிப்பு உயரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உதவி என கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து அனுப்புவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் அக். 8 முதல் மாறும். துறை ரீதியான வழக்குகளில் முடிவு ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். பிரிந்து சென்ற நண்பர்கள் தவறை உணர்ந்து உங்களைத் தேடி வருவர். ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, நெருக்கடி நீங்கும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.
சந்திராஷ்டமம்: அக்.10
அதிர்ஷ்ட நாள்: செப்.18, 23, 27. அக். 5, 9, 14
பரிகாரம் மருதமலை முருகன் வழிபாட்டால் வேண்டுதல் நிறைவேறும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us