மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மீனம்
15 டிச 2025
முந்தய மாத ராசி பலன்

மீனம்
மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்..: பிறரை வழிநடத்தும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மார்கழி நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்னைகள் ஏற்படும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலைகள் இழுபறியாகும். இந்த நேரத்தில் உங்கள் தனாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால் இடம், வீடு போன்ற வசதிகள் உண்டாகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். டிச. 21 வரை பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் கூடும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். பெரியோரால் பாராட்டும்படி செல்வாக்கு இருக்கும். மாணவர்களுக்கு டிச. 25 முதல் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை மறையும். குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். வேலைக்காக செய்த முயற்சியில் வெற்றி உண்டாகும். அரசு, சட்ட விஷயத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது மிக அவசியம். தினக்கூலிகள், சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன. 11
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 30. ஜன. 3, 12
பரிகாரம் ராமநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். சனி விரய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சியில் கையிருப்பு கரையும். வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றுவதற்காக செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்கள் தகுதியை வெளிக்காட்டும் வகையில் வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் இந்த நேரத்தில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க பணத்தை வாரி இறைப்பர். உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையும், பணியாளர்களுக்கு மேலதிகாரியும் ஆதரவாக இருப்பர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவரும் உங்களிடம் ஆதரவு கேட்கும் நிலை உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்பு விலகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். பெண்கள் ஆடை ஆபரணத்தில் கவனம் செலுத்துவர். டிச. 21 வரை கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். டிச. 25 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் இந்த நேரத்தில் வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமான உயர்வின் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம்: டிச. 16. ஜன. 11, 12
அதிர்ஷ்ட நாள்: டிச. 16, 21, 26, 30. ஜன. 3, 8
பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். சங்கடம் விலகும்.
ரேவதி: நேர்மையாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்கு சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதன் டிச. 25 முதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருடைய வாழ்க்கைத் துணைக்கும் இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரம்பரை சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அதிகாரிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜன்சி முன்னேற்றம் அடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்க்கும் நிலை ஏற்படும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சத்ரு ஜெய ஸ்தான அதிபதியும் யோகத்தை உண்டாக்குவர். இந்த நேரத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். கையில் பணம் இல்லை என்ற நிலை மாறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அந்நியரால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிறருக்கு உதவும் அளவிற்கு பொருளாதார நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: டிச. 16, 17. ஜன. 12, 13
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 3, 5, 14
பரிகாரம் ஆண்டாளை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.