மாத ராசி பலன்
மாத ராசி பலன் : மீனம்
10 ஏப் 2026
முந்தைய மாத ராசி பலன்

மீனம்
மீனம்
பூரட்டாதி 4 ம் பாதம்
சுய கவுரவத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காத உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் கர்மக்காரகன் சனி பகவான் ஜென்ம சனியாக சஞ்சரிப்பதுடன், மே 10 வரை உங்கள் தன குடும்பாதிபதியான செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இதனால் முயற்சிகளில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். என்னதான் திட்டம் தீட்டினாலும் அதை முடிக்க முடியாமல் போகும். எதனால் இந்த நிலை? நன்றாகத்தானே எல்லாம் போய்க்கொண்டிருந்தது என்று யோசிக்கும் அளவிற்கு நெருக்கடி அதிகரிக்கும். ஆனாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். பொன் பொருள் வாகனம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிலையறிந்து குருநாதர்போல் ஆலோசனைகள் கூறி வழிநடத்துவார். ராசிநாதன் குருவின் பார்வைகள், அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் உடல்நிலை சீராகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் கூடும். செலவுகள் கட்டுப்படும். மாணவர்களுக்கு பொது, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 30
அதிர்ஷ்ட நாள்: ஏப். 21. மே 3, 12.
பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி
நினைத்ததை சாதிக்க வேண்டும் என வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி ராசிக்குள், ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம். களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை ஏற்படுகிறது. இதனால் வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அனுசரித்துச் செல்வது நன்மையாகும். புதிய நட்புகள் உங்களது பலவீனங்களை அறிந்து உங்களை அவர்களுடைய வழியில் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர்களை ஓரடி விலக்கி வைப்பது நல்லது. சத்ரு ஜெய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அவற்றை சமாளிப்பீர்கள். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும் என்றாலும், குடும்பத்தினர் செயல்பாடு சங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் வார்த்தைகள் நெருப்பாக இருக்கும். அதன் வழியே குடும்பத்திற்குள் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. மே 10 முதல் தன குடும்பாதிபதி செவ்வாய் தன குடும்ப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்வதுடன் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் இருக்கும் வீட்டை சரி செய்வீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குரு பகவானின் பார்வை தொழில் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் லாபம் தரும். மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மே 1.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 21, 26, 30. மே 3, 8, 12.
பரிகாரம்: திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
ரேவதி
வாழ்வில் ஒவ்வொரு படியாக முன்னேறிவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 23 வரை புத்தி காரகன் புதன் உங்கள் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நன்றாகப் படித்துப் பார்ப்பது நன்மையாகும். புதிய இடம் வீடு வாங்குபவர்கள் அதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை நன்றாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முயற்சிக்கலாம். ராசிக்குள் சனி பகவானும், மே 10 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் கண்ணைக் கட்டி காற்றில் விட்டதுபோல் உங்கள் நிலை இருக்கும். எந்த முயற்சியை மேற்கொள்வது? எப்படி சமாளிப்பது என்றெல்லாம் யோசிப்பீர்கள் என்றாலும், இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவானின் பார்வைகள் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். வியாபாரம் தொழிலில் லாபத்தை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்தும். புதிய இடம் வீடு வாகனம் என்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். என்றாலும் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் வாக்குறுதிகள் வழங்குவதற்கு முன் நன்றாக யோசித்து வழங்கவும். பண விவகாரத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வதால் நன்மை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பின்மீது கவனம் கூடும்.
சந்திராஷ்டமம்: மே 2.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 21, 23, 30. மே 3, 5, 12, 14.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட அல்லல்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.