அவர்களை மாதிரி வரணும் - சாண்டி
ADDED : 1461 days ago
ஜீவிதா கிஷோர் தயாரிக்க, நடன இயக்குனர் மற்றும் பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடித்துள்ள, ‛3:33' படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக ஸ்ருதி செல்வம் நடிக்க, நம்பிக்கை சந்துரு இயக்கியுள்ள இப்படம், காலத்தின் ஒரு குறிப்பிடட் நேரத்தை மையமாக வைத்து திகில் நிறைந்த த்ரில்லர் பாணியில் படமாக்கியுள்ளனர். அக். 21ல் படம் வெளியாகிறது.
சாண்டி கூறுகையில், ‛‛நான் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் நடிக்க வேண்டும் என்றார் இயக்குனர். அவர் தான் உண்மையான நாயகன். சூப்பராக வேலை வாங்கினார். எனக்கு பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் மாஸ்டர் போல் வர ஆசை,'' என்றார்.