லட்சுமி மேனனின் ‛ஏஜிபி'
ADDED : 1475 days ago
சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் வந்துள்ள லட்சுமிமேனன் வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 கதைகளை கேட்டு திருப்தியடையாத இவர், ‛ஏஜிபி' என்ற படத்தில் நடிக்க ஆர்வமானார். நடந்ததை நடக்காததாக சொல்வதும், நடக்காததை நடந்ததாக சொல்வதும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்யும் மனக்கோளாறான பாத்திரத்தில் லட்சுமிமேனன் நடிக்கிறார்.
அஞ்சலி, கெளதம், பூஜா என்ற மூன்று கதாபாத்திரங்கள் ஆட்கொண்டவராக லட்சுமிமேனன் நடிக்கும் இப்படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் போஸ்டரை விஜய்சேதுபதி, ஆர்யா, விமல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் சக்தி சௌந்தர்ராஜன், சிம்புதேவன் என ஆறு பேர் வெளியிட்டனர்.