மைக் டைசனுடன் மோத அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டா
ADDED : 1460 days ago
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணுரெட்டி உள்பட பலர் நடித்து வரும் படம் லிகர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் மூலம் முதன்முதலாக இந்திய படத்தில அறிமுகமாகிறார் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன். இவருடன் விஜய் தேவரகொண்டா நடிக்கப்போகும் காட்சிகளுக்காக லிகர் படக்குழு அமெரிக்கா செல்கிறது. அங்கு சில வாரங்கள் முகாமிட்டு அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட ஆக்சன் மற்றும் வசன காட்சிகளை படமாக்கி விட்டு இந்தியா திரும்புகிறது லிகர் படக்குழு.