உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுகங்களின் கிரிமினல்

புதுமுகங்களின் கிரிமினல்

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் கிரிமினல். அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாகும். ஆப்பிள் - பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் படமாக்கி இருக்கிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !