தமிழ், தெலுங்கில் தயாராகும் சமந்தாவின் பேண்டஸி படம்
ADDED : 1497 days ago
நாக சைதன்யாவுடனான பிரிவை அறிவித்த சமந்தா சில நாட்களாக ஓய்வில் இருந்தார். மன அமைதிக்காக கோவில்களுக்கு சென்று வந்தார். தற்போது விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை தனது வழக்கறிஞரிடம் ஒப்படைத்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழில் ஒரு புது முயற்சியாக பேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.