சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
ADDED : 1465 days ago
நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமார் வீடு உள்ளது.நேற்று முன்தினம் இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சரத்குமார் வீட்டில் சோதனை நடத்தியதில் புரளி என தெரிந்தது.மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் கோனிமேடு பகுதியைச் சேர்ந்த புவனேஷ் 20 என்பதும் ஏற்கனவே நடிகர் அஜித் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரிய வந்தது.புவனேஷ் சற்று மனநலம் பாதித்தவர் என்பதால் போலீசார் அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.