மகளை நடிகையாக்கிய சீரியல் அண்ணியார்!
ADDED : 1464 days ago
சீரியல் நடிகையான ரேகா கிருஷ்ணப்பா தனது மகள் வெள்ளித்திரையில் கதநாயாகியாக நடிக்கப்போவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தெய்வமகள் மெகா தொடரில் அண்ணி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா. சீரியலில் நாயகன் பிரகாஷ், ரேகாவை அண்ணியாரே என்று அழைப்பது பிரபலமாகிவிட்டதால் ரசிகர்களும் இவரை அண்ணியார் என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். தற்போது திருமகள் தொடரில் நாயகியின் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல் நடிகையாக, நடிப்பில் புலியாக கலக்கி வரும் ரேகா கிருஷ்ணப்பா தனது மகளை வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகம் செய்துள்ளார். அவர் தன்னுடைய இண்ஸ்டாகிராமில் அவரது மகள் பூஜாவின் புகைப்படங்களை வெளியிட்டு 'வெள்ளித்திரையில் தனது மகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பூஜாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.