டான்ஸ் வெசஸ் டான்ஸ் சீசன்- 2 தொடங்கியது
ADDED : 1505 days ago
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் வெசஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் நேற்று முதல் (அக்டோபர் 17) ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் 16 ஜோடிகள் கலந்து கொண்டு ஆட இருக்கிறார்கள். நடிகை குஷ்பு, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். பேராசிரியர் ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நேற்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக முதன்முறையா 3டி வடிவ அரங்கை பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.