உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னட நடிகர் ஷங்கர் ராவ் காலமானார்

கன்னட நடிகர் ஷங்கர் ராவ் காலமானார்

பழம்பெரும் கன்னட நடிகர் ஷங்கர் ராவ். காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். சமீபகாலமாக வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த சில்லி லல்லி தொடர் பெரும் புகழ் பெற்றது. 84 வயதான ஷங்கர் ராவ் பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !