ஐஸ்வர்யா ராஜேஷ் - நெல்சன் வெங்கடேசன் இணையும் புதிய படம்
ADDED : 1450 days ago
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். அடுத்து இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஹீரோயின் கதையான இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், கிட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், என்ஜிகே உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 40வது படம். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. படத்தின் டைட்டில் வெளியிடப்படவில்லை.