உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

சிம்பு படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படம் அடுத்த மாதம் 25-ந்தேதி வெளியாகிறது. இதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் 15 வயது சிறுவன் கெட்டப்பில் சிம்பு தோன்றியதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அங்கு நடக்கும் சண்டை காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லீ விட்டேகர் என்பவர் படமாக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு தமிழில் கமல் நடித்த விஸ்வரூபம், அஜித்தின் ஆரம்பம் மற்றும் ராஜமவுலியின் பாகுபலி ஆகிய படங்களுக்கும் ஸ்டன்ட் அமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !