உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினேகன் - கன்னிகாவை வாழ்த்தி பரிசளித்த இளையராஜா

சினேகன் - கன்னிகாவை வாழ்த்தி பரிசளித்த இளையராஜா

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் சினேகன். கடந்த ஜூலை மாதம் தனது 8 ஆண்டு காதலியான நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

இந்தநிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சினேகன்- கன்னிகா தம்பதியை அழைத்து வாழ்த்தியவர், சினேகனுக்கு ஒரு மோதிரத்தையும் பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சினேகன், எங்கள் திருமணத்திற்கு வர இயலாததால் நேரில் அழைத்து மோதிரம் அணிவித்து அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்த இசைஞானிக்கு நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !