தொடர்ந்து போராடுங்கள் - சமந்தா
ADDED : 1540 days ago
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்த சமந்தா, யோகா, தியானத்தில் ஈடுபட்டார். தனது தோழியுடன் சர் தாம் எனும் வடமாநிலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார். சமூகவலைதளத்தில் பாசிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ‛‛நீங்கள் இப்போது இருப்பதற்கு நன்றி செலுத்துங்கள். நாளை நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்காக தொடர்ந்து போராடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.