ஆர்ஆர்ஆர் படத்தை 2.45 மணி நேரமாக குறைக்கும் ராஜமவுலி
ADDED : 1440 days ago
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர்படம் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. 2022 சங்கராந்திக்கு வெளியாகும் இப்படத்தின் இறுதிக்கப் பட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேசபக்தி கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் காட்சிகளை எடிட் செய்து முடித்துள்ள ராஜமவுலி, 3 மணி நேரம் ரன்னிங் டைம் இருப்பதால், இதை 2.45 மணி நேரமாக குறைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.