7 பதக்கங்கள் பெற்ற மாதவனின் மகன்
ADDED : 1440 days ago
மாறா படத்தை அடுத்து தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார் மாதவன். தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் தயாராகியுள்ள இப்படம் 2022 ஏப்ரல்1ல் திரைக்கு வருகிறது. மாதவனின் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர். இந்திய அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்றிருக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற 47ஆவது ஜூனியர் நேஷனல் சாம்பியன் ஷிப் 2021 போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் 7 பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து மாதவனின் மகனுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்குள் குவிந்து கொண்டிருக்கிறது.